மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை (15.05.2021) இருபது (20) கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று (03) கொரோனா நோயாளர்கள் மரணமடைந்துள்ளதாக மாவட்ட பிராந்திய சகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி சுகாதர வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பதினைந்து பேரும், ஆரையம்பதி சுகாதர வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இரண்டு பேரும், காத்தான்குடி சுகாதர வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இரண்டு பேரும், செங்கலடி சுகாதர வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ஒருவருமாக இருபது பேர் தொற்றாளர்களா அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இரண்டு பேரும் காத்தான்குடியில் ஒருவருமாக மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment