புதைத்து வைக்கப்பட்டிருந்த 18 லீட்டர் கள்ளுடன் பெண் ஒருவர் திருக்கோவில் பொலிஸாரால் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

புதைத்து வைக்கப்பட்டிருந்த 18 லீட்டர் கள்ளுடன் பெண் ஒருவர் திருக்கோவில் பொலிஸாரால் கைது

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யபட்டதுடன் 18 லீட்டர் கள்ளு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய  இன்று புதன்கிழமை  காலை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர்  குறித்த பெண்ணின் வீட்டினை சோதனையிட்டு தேடியதில் நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டு வைத்திருந்த நிலையில் 18 லீட்டர் கள்ளு மீட்கப்பட்டுள்ளது . 

இதன்போது கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட 41 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 3 கலனில் 24 லீற்றர் கள்ளை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment

Post Bottom Ad