பொலிஸாரை கண்டு பதற்றமடைந்த இருவர் தங்களிடமிருந்த ஹெரோயினை வீசும் போது சிக்கினர் - ஓட்டமாவடியில் சம்பவம்! - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

பொலிஸாரை கண்டு பதற்றமடைந்த இருவர் தங்களிடமிருந்த ஹெரோயினை வீசும் போது சிக்கினர் - ஓட்டமாவடியில் சம்பவம்!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பொலிஸாரிடம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் சிக்கிக் கொண்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் தேவையின்றி வீதிக்கு வரும் மக்களை கட்டுப்படுத்தும் பணியில் வாழைச்சேனை பொலிஸார் கடமையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் ஓட்டமாவடி பிரதான வீதியால் வந்த இருவரை பொலிஸார் நிறுத்தியபோது பதற்றமடைந்த இருவரும் தங்களிடமிருந்த ஹெரோயின் போதைப் பொருளை வீசிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இவ்வாறு போதைப் பொருளை வீசிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட இருவரையும் பொலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். கைது செய்த இருவரையும் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad