மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பத்தினிகே சமரசிறி உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு முதலாம் விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற முறிகள் ஏலத்தின் போது, அரச சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ், நம்பிக்கையை சீர்குலைத்து அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் சட்ட மா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
நிலவும் கொரோனா நிலைமையால், இம்மாதம் 7 ஆம் திகதி வரை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளையும் திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என நீதிமன்ற சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய, குறித்த வழக்கை திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்காதிருப்பதற்கு சம்பா ஜானகி ராஜரத், தமித் தொட்டவத்த மற்றும் நாமல் பல்லே ஆகிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment