அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கான 10 விதிமுறைகள் அடங்கிய புதிய சுற்று நிரூபம் வெளியானது - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கான 10 விதிமுறைகள் அடங்கிய புதிய சுற்று நிரூபம் வெளியானது

(எம்.மனோசித்ரா)

கொவிட் பரவலுக்கு மத்தியில் அரச சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான புதிய சுற்று நிரூபம் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இப்புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்று நிரூபத்தில் அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் போது நிறுவன பிரதானிகள் பின்பற்ற வேண்டிய 10 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த சுற்று நிரூபத்தில் அரச சேவைகளுக்கு ஊழியர்களை அழைக்க வேண்டிய முறைமை தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அரச சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக குறைந்தளவிலான ஊழியர்களை வரவழைப்பது தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள் , நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு ஊழியர்கள் அழைக்கப்படும் போதும் முறையான செயற்திட்டமொன்று பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு முறையான திட்டமிடலொன்றின் அடிப்படையில் ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டிய தினத்தில் சமூகமளிக்காவிட்டால் மாத்திரம் , அன்றைய தினத்தை அவரது தனிப்பட்ட விடுமுறையாகப் பதிவு செய்ய வேண்டும்.

மேற்கூடிய விதிமுறைகளின் படி ஊழியர்களை பணிக்கு அழைக்கும் போது , அதில் கர்பிணிகள் உள்ளடக்கப்படக்கூடாது.

பணிக்கு சமூகமளிக்க தேவையற்ற தினங்களில் குறித்த ஊழியர்கள் இணைய வழியூடாக சேவையில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கான சேவை வழங்கும் நிறுவனங்களில் பொது போக்குவரத்தை விட இயன்றவரை தனிப்பட்ட வாகனத்தை அல்லது சேவை நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகளத்தை மாத்திரம் பயன்படுத்துவதோடு, அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக பொதுமக்களுக்கான அனுமதியும் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

ஏதேனுமொரு வகையில் அரச ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுவார்களாயின் குறித்த தனிமைப்படுத்தப்படும் காலப்பகுதிக்கு ஊதியம் வழங்கப்படும்.

ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் செயற்பாடுகளில் நிறுவன பிரதானிகள் தனிப்பட்ட ரீதியில் அவதானம் செலுத்த வேண்டும்.

மேற்கூறப்பட்ட விதிமுறைகள் ஊடாக அரச சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச்செல்லக் கூடிய அதேவேளை, அரச நிறுவனங்கள் கொவிட் அற்றவையாகவும் பேணப்படும்.

No comments:

Post a Comment