ஓட்டமாவடியில் கொவிட் மர­ணங்­கள் அடக்கம் செய்யப்பட்டோர் தொகை 100 ஐ தாண்டியது - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

ஓட்டமாவடியில் கொவிட் மர­ணங்­கள் அடக்கம் செய்யப்பட்டோர் தொகை 100 ஐ தாண்டியது

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் தெரிவு செய்யப்பட காணியொன்றில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்கள் 100 ஐத் தாண்டி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் நபர்களை அடக்கம் செய்யும் பணிகள் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்று வருவதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

மஜ்மா நகர் பகுதியில் கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை அடக்கம் செய்யும் பணிகள், கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

அந்த வகையில், 05ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்ட 8 ஜனாஸாக்களுடன் இதுவரை 101 கொரோனா தொற்றாளர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதில், 98 முஸ்லிம்களின் ஜனாஸாக்களும், 2 கிறிஸ்தவர்களின் சடலமும், 1 பெளத்தரின் சடலம் உட்பட 101 நபர்களின் உடல்கள் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment