ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது உலகின் மிகப் பெரிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது உலகின் மிகப் பெரிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள்

உலகின் மிகப் பெரிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது. 

இதனால் உள்நாட்டு துறைமுக சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்கவுள்ளது. 

பனாமா நாட்டின் கொடியுடன் பயணத்தினை மேற்கொள்ளும் வெஸ்ட் கரினா மற்றும் வெஸ்ட் பொலாரிஸ் ஆகிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்களுமே ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது.

நீண்ட காலத்திற்கு உபகரணங்களை திருத்துதல், திருத்த சேவைகளுக்காக ஒன்றரை வருட காலத்திற்கு ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நங்கூரமிட்டு இந்த இரண்டு கப்பல்களும் சேவைகளை பெற்றுக் கொள்ளவுள்ளது.

இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை துறைமுக வர்த்தக மற்றும் விற்பனை பணிப்பாளர் லான்ஸ் சூஓ இது தொடர்பாக தெரிவித்ததாவது, நீண்ட நாட்களுக்கு நங்கூரமிட்டிருக்கும் கப்பல்களுக்கு தேவையான சேவைகளையும் வசதிகளையும் வழங்குவதினூடாக உள்நாட்டு துறைமுக சேவை வழங்குனர்களுக்கு மிகவும் சிறந்தசந்தர்ப்பமாக இது அமைந்து காணப்படுகின்றது. 

இதனூடாக கப்பல்களை பராமரித்தல், ஊழியர்களை மாற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குதல், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் மற்றும் கழிவுகளை அகற்றுதல் போன்றசேவைகள் விசேடமானவையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை நிருபர்

No comments:

Post a Comment