தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து, அலுவலக ரயில் சேவைகள் வழமைபோன்று சேவையில் - புகையிரத திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து, அலுவலக ரயில் சேவைகள் வழமைபோன்று சேவையில் - புகையிரத திணைக்களம்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் தூர பிரதேச ரயில் சேவையினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக நகர் கடுகதி ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. அலுவலக ரயில் சேவைகள் வழமைபோன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பு கோட்டை - பதுள்ளை, கொழும்பு கோட்டை - கண்டி - கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை - கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை - பொலனறுவை ஆகிய கடுகதி ரயில் சேவைகள் நாளைமறுதினம் தொடக்கம் சேவையில் ஈடுபடமாட்டாது.

அத்துடன் பதுளை - கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை - பதுள்ளை, பொலனறுவை - கொழும்பு கோட்டை, காங்கேசன்துறை - கொழும்பு கோட்டை, பதுள்ளை - கொழும்பு கோட்டை ஆகிய பிரதேசங்களுக்கான கடுகதி ரயில்கள் சனிக்கிழமை முதல் சேவையில் ஈடுபடமாட்டாது.

காலை 8.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி புறப்படும் சிக்ரகாமி கடுகதி ரயில் எதிர்வரும் 8, மற்றும் 14 ஆம் திகதிகளிலும், சேவையில் ஈடுப்படுத்தப்படும். அத்துடன் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் ரயில் எதிர்வரும் 9 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் சேவையில் ஈடுப்படுத்தப்படும்.

தற்போது சேவையில் உள்ள அலுவலக ரயில் நேர அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. அலுவலக ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை முடிந்தளவிற்கு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ரயில் நிலையத்திற்குள்ளும், ரயிலுக்குள்ளும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பொது பயணிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ரயில் நிலையத்தில் தேவையற்ற வகையில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளவும். ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment