விஞ்ஞானிகள் முதன்முறையாக யுரேனஸ் கிரகத்திலிருந்து எக்ஸ்-கதிர்கள் வெளியேறுவதை கண்டுபிடித்துள்ளனர்.
2002 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நாசாவின் சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையத்தினால் எடுக்கப்பட்ட யுரேனஸ் கிரகத்தின் இரண்டு காட்சிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
முதல் அவதானிப்பில் எக்ஸ்-கதிர்கள் தெளிவாகக் கண்டறியப்பட்டன. இந்த முடிவானது யுரேனஸ் பற்றி மேலும் அறிய உதவுக்கூடும்.
யுரேனஸ் சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும்.
இது சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற அனைத்து கிரகங்களிலிருந்தும் வேறுபடுகிறது.
இது ஒரு பெரிய வாயுக்கோளம் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஹுலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 டிகிரி செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 84 புவி ஆண்டுகள் ஆகும்.
இந்த கண்டுபிடிப்புகளுக்கு முன்னர் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை எக்ஸ்-கதிர்கள் கண்டறியப்படாத சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் என்று கூறுப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment