அமெரிக்காவுடனான உறவுகளை மீளவும் புதுப்பிப்பிப்பதற்கு எடுத்துள்ள பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 13, 2021

அமெரிக்காவுடனான உறவுகளை மீளவும் புதுப்பிப்பிப்பதற்கு எடுத்துள்ள பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்

“அமெரிக்க நிர்வாகத்துடனான உறவுகளை மீளவும் புதுப்பிப்பிப்பதற்கு எடுத்துள்ள பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திடமிருந்து மந்தமான பதில் கிடைத்துள்ளது”

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோது, இஸ்லாமாபாத் வொஷிங்டனுடனான தனது உறவுகளை பொருளாதார ஒத்துழைப்பின் அடிப்படையில் பாதுகாப்பாக மாற்றுவதிலிருந்து மீளப்புதிப்பிப்பதற்கான முயற்சிகளை எடுத்திருந்தது என்று தி எக்ஸ்பிரஸ் ரிபியூன் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பைடனுக்கு பாகிஸ்தானை நன்கு தெரியும் என்பதும் அந்நாட்டைப் பற்றிய அவரது அறிவு சிறந்த புரிதலுக்கு வழி வகுக்க உதவும் என்பதிலிருந்து பிறந்த நம்பிக்கையின் காரணமாக பாகிஸ்தான் இந்த முயற்சிகளை எடுத்திருந்தது.

எவ்வாறாயினும், உறவுகளின் மீளமைப்பைக் கோருவதற்கான பாகிஸ்தானின் உந்துதலுக்கு பைடன் நிர்வாகம் இதுவரை சாதகமான நிலைப்பாட்டை காண்பிக்கவில்லை என்பதை பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரங்கள் ஒப்புக் கொண்டதாக தி எக்ஸ்பிரஸ் ரிபியூன் தெரிவித்துள்ளது.

நாங்கள் அமெரிக்காவுடனான உறவை இரு தரப்பு ‘வில்லை’ மூலமாக மட்டுமே உருவாக்க விரும்புகிறோம், அதாவது நேரடியாகவே அந்த உறவுகள் இருக்க வேண்டும். சீன மூலமாகவோ அல்லது இந்தியா மூலமாகவே அந்த இரு தரப்பு உறவுகளை உணர்வதற்கோ பேணுவதற்கோ விரும்பவில்லை என்று பாகிஸ்தானின் கொள்கை வகுப்புக்களில் ரூடவ்டுபட்டு மூத்த அதிகாரியொருவர் தி எக்ஸ்பிரஸ் ரிபியூனிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment