திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று கடைக்குச் சென்ற சிறுமியின் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (11) காலை இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
பேராறு பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் பேராறு பிரதான வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீதியை கடக்க முற்பட்ட போதே வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கிறனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை நிருபர் பாருக்
No comments:
Post a Comment