ஒலிம்பிக்கை புறக்கணிப்பது தொடர்பில் தாம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - ஜப்பான் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

ஒலிம்பிக்கை புறக்கணிப்பது தொடர்பில் தாம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - ஜப்பான்

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்பது தொடர்பில் தாம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ஜப்பான் அரசாங்கத்தின் உயர் செய்தித் தொடர்பாளர் கட்சுனோபு கட்டோ புதன்கிழமை தெரிவித்தார்.

சீனாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் 2022 பீஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிப்பதை ஜோ பைடன் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

குறிப்பாக பீஜங் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை எவ்வாறு ஒருங்கிணைந்த வழியில் தொடரலாம் என்பது குறித்து தனது கூட்டாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக அமெரிக்கா கூறியிருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே ஜப்பான் அரசாங்கத்தின் உயர் செய்தித் தொடர்பாளர் மேறகண்ட கருத்தினை புதன்கிழமை கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad