மோட்டார் சைக்கிள் விபத்தில் மீராவோடைச் சேர்ந்த எம்.ஜே. முபாரிஸ் மரணம் - News View

Breaking

Post Top Ad

Friday, April 16, 2021

மோட்டார் சைக்கிள் விபத்தில் மீராவோடைச் சேர்ந்த எம்.ஜே. முபாரிஸ் மரணம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடியில் இன்று (16.04.2021) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இன்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஓட்டமாவடி பாலத்துக்கு அருகிலுள்ள புகையிரத தண்டவாளத்தில் சறுக்கி விழுந்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி - தியாவட்டவான் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணிபுரிந்த மீறாவோடை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஜே. முபாரிஸ் (வயது - 21) எனும் இளைஞனே இவ் விபத்தில் மரணமடைந்துள்ளார்.

பணிபுரியும் பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் இருந்து வேலை முடிந்து வீடு செல்லும்போது ஓட்டமாவடி பாலத்தின் புகையிரத கடவையினை கடக்கும்போது மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் இவ் விபத்து இடம்பெற்று இருக்கலாம் என்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மழை காரணமாக மோட்டார் சைக்கிள் புகையிரத தண்டவாளத்தில் சறுக்கியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்தள்ளதுடன் மற்றையவர் காயமடைந்துள்ளார்.

மரணமடைந்த இளைஞனின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad