கோறளைப்பற்று மத்தியில் கஞ்சி தயாரிப்பு தொடர்பில் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, April 16, 2021

கோறளைப்பற்று மத்தியில் கஞ்சி தயாரிப்பு தொடர்பில் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை

எஸ்.எம்.எம்.முர்ஷித்

தேசிய உணவு பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு சுகாதார அமைச்சின் வலியுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் பிரதேச சுகாதார அலுவலகம் தோறும் இடம்பெற்று வருகின்றது

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பள்ளிவாயல் நிருவாகத்தினருக்கு நோன்பு மாதத்தினை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு விழிப்பூட்டல் கருத்தரங்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம் பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கானின் வழிகாட்டலில் பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மேற்பார்வை பொது சகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொது சகாதார சுகாதார பரிசோதகர்களான எம்.ஏ.ஏ.நௌசாத், ஏ.அர்.எம்.ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டு நோன்பு காலத்தில் நோன்பு கஞ்சி தயாரிப்பது தொடர்பாகவும், அதனை கையாள்வது தொடர்பாகவும் விளக்கம் அழிக்கப்பட்டதுடன், நோன்பு காலத்தில் கொரோனா பாதுகாப்பு கருதி சுகாதார திணைக்களத்தின் விதிமுறைகளை பேணி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு நோன்பு காலத்தில் நோன்பு கஞ்சி தயாரிப்பது தொடர்பில் பள்ளிவாயல்களுக்கு சுகாதார பரிசோதகர்கள் வருகை தந்து பார்வையிடுவதுடன், சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிவாயல் நிருவாகத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

நோன்பு காலத்தில் பள்ளிவாயல்களுக்கு முகக்கவசம் அணிந்து வருதல், தொழுகை விரிப்பு கொண்டு வருதல், சமூக இடைவெளியை பேணுதல், தொழுகைக்கு குறைந்தோரை அனுமதித்தல், நோன்பு கஞ்சி தயாரிப்பவர்கள் சுகாதார விதிமுறைகளை பேணி நடக்க வேண்டும், பள்ளிவாயல் மற்றும் மலசல கூடங்கள் சுத்தம் பேணப்படல், பள்ளிவாயலில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்படுதல் போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment