இலங்கையில் 'டாலியன் மெடிக்கல் யூனிவர்சிட்டி பேரண்ட்ஸ் யூனியன்' உதயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

இலங்கையில் 'டாலியன் மெடிக்கல் யூனிவர்சிட்டி பேரண்ட்ஸ் யூனியன்' உதயம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

(DMUPU) டாலியன் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் பெற்றோர்களுடைய ஒன்றுகூடல் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை (27) இடம்பெற்றது.

எடு லங்காவின் தலைவர் கலாநிதி மொஹமட் பய்ஸீன் தலைமையில் அதே நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹஷ்ஷானின் வழிகாட்டுதலிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், டாலியன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 230 க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் மற்றும் 230 குடும்பங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக 'டாலியன் மெடிக்கல் யூனிவர்சிட்டி பேரண்ட்ஸ் யூனியன்' என்ற சம்மேளனம் ஒன்று இதன்போது உருவாக்கப்பட்டது.

இச்சம்மேளனத்தை நிர்வாகம் செய்ய 12 உறுப்பினர்களைக் கொண்ட அதிகாரபூர்வ குழுவொன்றும் தெரிவு செய்யப்பட்டது.

குறிப்பாக, ஏழு மருத்துவர்கள், இரு வழக்கறிஞர்கள், இரு பிரபல தொழிலதிபர்கள் மற்றும் ஒரு கலாநிதி அடங்கலாக சிறப்புக் குழு நிறுவப்பட்டது. 

இந்த சங்கத்தின் தலைவராக டாக்டர் பிரியான் செனவிரத்னவும் டாக்டர் மொரானி விஜேகுணவர்தன துணைத் தலைவராகவும் கலாநிதி டீ.எம்.அனுவர் உலுமுத்தீன் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். 

மேலும், வழக்கறிஞர் எச்.எம் சித்தீக் துணை செயலாளராகவும் டாக்டர் நெத்சிங்க, வணிக ஆலோசகர் ரிஷா ஹமீத் துணைப் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

நிர்வாக உறுப்பினர்களாக, டாக்டர் எஸ். பண்டாரா எதிரிசிங்க, டாக்டர் உபாலி கமகே, டாக்டர் புத்திக, டாக்டர் ராகினி பிள்ளை, டாக்டர் வீரக்கோடி, டாக்டர் ஜெயந்த திலகரட்ன ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக, இலங்கைக்கு வெளியே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் சங்கம், அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்காக 'டாலியன் மெடிக்கல் யூனிவர்சிட்டி பேரண்ட்ஸ் யூனியன்' என்ற இந்த சம்மேளனம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம்.

No comments:

Post a Comment