உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்பட்டது - பேராயர் ரஞ்சித் ஆண்டகை - News View

Breaking

Post Top Ad

Sunday, April 18, 2021

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்பட்டது - பேராயர் ரஞ்சித் ஆண்டகை

(செ.தேன்மொழி)

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலானது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்காக, பொரளை மற்றும் மாதம்பிட்டி பொது மயானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை இன்று ஞாயிற்றுக்கிழமை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை திறந்து வைத்திருந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, மனித வாழ்க்கை என்பது மிகவும் பெறுமதி மிக்கதாகும். அதனை எந்தவொரு பொருளுடனும் ஒப்பிட்டு தாழ்த்தி பேச முடியாது. சுயநல எண்ணங்கள் நிறைந்த உலகத்தில் மனித உயிர்கள் மிகவும் தாழ்த்தப்பட்டு மதிப்பிடப்படுகின்றன.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலானது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டதாகும். அதனால் மதத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெறவில்லை. இது தொடர்பில் இலங்கையர் என்ற வகையில் நாம் வெட்கமடைய வேண்டும். 

எமது சுயநலத்திற்காக இன்னுமொரு மதம், இனம் மற்றும் மொழியைச் சார்ந்தவரை நாம் துன்புறுத்தியுள்ளோம். இந்நிலையில் தனது பலத்தை காண்பிப்பதற்காக இன்னெமொருவரை கொலை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

இதேவேளை ஒரு மதம், இனம் அல்லது மொழியைச் சார்ந்தவர்களுக்கு இடையூறு செய்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய செயற்பாடுகள் காரணமாக முழு உலகமே அசுந்தமானதாகவே விளங்கும். அதனால், அனைவரும் தங்களது வாழ்க்கையில் மற்றுமொருவரின் வாழ்வுக்கு உதவிகளை செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad