முல்லைத்தீவில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 18, 2021

முல்லைத்தீவில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை புலனாய்வாளர்களின் தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு சாலை காட்டுப்பகுதியில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (18) மாலை குறித்த பகுதியில் விமானப் படையினரால் அடையாளம் காணப்பட்ட வெடி பொருட்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 08, 80 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 03, கைக் குண்டு ஒன்றும், விடுதலை ப்புலிகளின் தயாரிப்பு குண்டு 04, ஆர்.பி.ஜி குண்டுகள் 05 என்பன மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment