ஆளும் கட்சிக்குள் குழப்பம், ஒரு சில உறுப்பினர்கள் வழக்கு தொடரத் தீர்மானம் - காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் லொக்குகே - News View
  • Home
  • about us
  • contact us

News View

About Us

About Us
    • உள்நாடு
    • அரசியல்
    • கல்வி
    • வெளிநாடு
    • விளையாட்டு
    • தொழிநுட்பம்
    • கட்டுரைகள்
    • சினிமா

    Breaking

    Thursday, April 1, 2021

    Home அரசியல் ஆளும் கட்சிக்குள் குழப்பம், ஒரு சில உறுப்பினர்கள் வழக்கு தொடரத் தீர்மானம் - காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் லொக்குகே

    ஆளும் கட்சிக்குள் குழப்பம், ஒரு சில உறுப்பினர்கள் வழக்கு தொடரத் தீர்மானம் - காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் லொக்குகே

    Newsview April 01, 2021 அரசியல்,
    (இராஜதுரை ஹஷான்)

    மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் எல்லை நிர்ணய விவகாரம், தேர்தல் முறைமை உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பங்காளி கட்சிகளில் பெரும்பாலானோர் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

    மாகாண சபை தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தல் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் மாகாண சபை தேர்தல் குறித்து முன்வைத்த யோசனை தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்குமாறு குறிப்பிடப்பட்டடுள்ளது.

    மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்கள்.

    மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என குறிப்பிட்டு ஆளும் தரப்பினர் ஒரு சில உறுப்பினர்கள் எல்லை நிர்ணயம், தேர்தல் முறைமை ஆகிய காரணிகளை முன்வைத்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளார்கள்.

    பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த இணக்கம் தெரிவித்துள்ளார்கள். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பரிசீலனை செய்யப்படும்.

    உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றிருந்தால் தற்போது இந்த நெருக்கடி நிலை தோற்றம் பெற்றிருக்காது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபையின் நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது ஜனநாயக கோட்பாட்டுக்கு முரணானது .

    புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் குறித்து கவனம் செலுத்துமாறு மகாசங்கத்தினர் வலியுறுத்தியுள்ளார்கள். இந்த யோசனை தொடர்பில் ஜனாதிபதி மகாசங்கத்தினருடன் இடம்பெறும் சந்திப்பின் போது தீர்மானத்தை அறிவிப்பார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு

    மாகாண சபைத் தேர்தலை அரசியல் காரணிகளுக்காக பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. மாகாண சபைத் தேர்தல் எத்தேர்தல் முறையில், எப்போது இடம்பெற்றாலும் பொதுஜன பெரமுன நாடளாவிய ரீதியில் பெற்றி பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றார்.

    Tags # அரசியல்
    Share This
    Author Image

    About Newsview

    அரசியல்
    Author - Newsview at April 01, 2021
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags அரசியல்

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Author Details

    Variables / Comments

    • disqusShortname
    • commentsSystem

    Entertainment

    TrendsTen
    all right reserved. develop by max mithun khan. Powered by Blogger.

    Labels

    • அரசியல்
    • உள்நாடு
    • கட்டுரைகள்
    • கல்வி
    • சினிமா
    • தொழிநுட்பம்
    • விளையாட்டு
    • வெளிநாடு

    Follow Us On Facebook

    Eastern CM Speech

    popular

    • மாணவர்களை இலக்கு வைத்து விபச்சார விடுதி : மூவர் கைது
      மாணவர்களை இலக்கு வைத்து விபச்சார விடுதி : மூவர் கைது
      ஹெரணை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவள...
    • இலங்கையில் மரண தண்டனை பட்டியலில் 05 மாணவர்கள்
      இலங்கையில் மரண தண்டனை பட்டியலில் 05 மாணவர்கள்
      சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித...
    • புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு : 7ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம்
      புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு : 7ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம்
      (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமை...
    • ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம்
      ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம்
      2024/25 ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவி...
    • பாதாள உலகக்குழு எனக்கூறி நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது : சட்டம், ஒழுங்கை உரியவாறு பேண வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்குண்டு - சுமந்திரன் தெரிவிப்பு
      பாதாள உலகக்குழு எனக்கூறி நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது : சட்டம், ஒழுங்கை உரியவாறு பேண வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்குண்டு - சுமந்திரன் தெரிவிப்பு
      (நா.தனுஜா) பாதாள உலகக்குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்...

    Pages

    Total Pageviews

    Contact Form

    Name

    Email *

    Message *

    All Right Reserved by News Views | Design by Max Mithun Khan
    All Rights Reserved By News View | Design by max mithun khan