இலங்கை மின்சார சபையின் கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மாதாந்த மின் கட்டணத்தை செலுத்தாத மின் பாவனையாளர்களின் மின் இணைப்பு துண்டித்தல் தொடர்பான சிவப்பு அறிவித்தல் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளரால் விடுக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் துண்டித்தல் தொடர்பான சிவப்பு அறிவித்தல் மின்சாரக் கட்டணம் நிலுவையிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு மின்மானி வாசிப்பவர்களூடாக விநியோகிக்கப்படுகின்றது.
கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், மாளிகைக்காடு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச மின் பாவனையாளருக்கே இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலான கட்டணத்தை கொண்டிருப்பவர்களின் மின் துண்டிப்பு செய்யப்படவுள்ளதோடு, அவ்வாறு இணைப்பு துண்டிக்கப்படுமிடத்தில் மீள் இணைப்பை ஏற்படுத்துவதற்காக மின் நிலுவைக் கட்டணம், தண்டப்பணம் மற்றும் மீள் இணைப்புக் கட்டணம் என்பன செலுத்த வேண்டுமென சிவப்பு அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்த மின்சாரப் பட்டியலில் காணப்படும் நிலுவையினை உடனடியாக செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்துக் கொள்ளுமாறு மின் பாவனையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
மின் இணைப்பு துண்டிக்கப்படும் இடத்து மேலதிகமாக 1250 ரூபாய் செலுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் துண்டிக்கப்பட்டு 03 மாதங்களுக்குள் மீண்டும் மின்சாரத்தை பெற்றுக் கொள்ளாவிடின் உரிய இடத்திலுள்ள மின் மானியுடன் ஏனைய இலங்கை மின்சார சபையின் உபகரணங்களும் அகற்றப்படுமெனவும், அவ்வறித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஒலுவில் விசேட நிருபர்)
No comments:
Post a Comment