உயிருடன் வந்தவரை சவச்சாலைக்கு அனுப்பிய வைத்தியருக்கு இடமாற்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

உயிருடன் வந்தவரை சவச்சாலைக்கு அனுப்பிய வைத்தியருக்கு இடமாற்றம்

உயிருடன் இருந்த ஒரு நபரை இறந்து விட்டாரென தீர்மானித்து சவச்சாலைக்கு அனுப்பிய நீர்கொழும்பு வைத்தியசாலையின் மருத்துவர் தற்காலிகமாக புத்தளம் பொது மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் லால் பனாபிட்டிய இதை தெரிவித்துள்ளார். 

மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணை முடியும் வரை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டார். 

அத்தோடு இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு வைத்தியசாலை நடத்திய விசாரணை அறிக்கை கடந்த வாரம் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த அறிக்கையின்படி, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது அமைச்சின் பொறுப்பாகுமென்று நீர்கொழும்பு மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் நிர்மலா லோகநாதன் தெரிவித்தார். 

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருந்ததால் மயக்கமடைந்த ஒரு நோயாளி இறந்து விட்டதாக கூறி சவச்சாலைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment