இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைகளை நிறைவுசெய்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் சிகிச்சைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலையைவிட்டு வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment