திருகோணமலையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

திருகோணமலையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் நேற்று (24) மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குச்சவெளி மதுரங்குடா பகுதியில் ஆணொருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபரின் இரண்டு கைகளிலும், முகத்திலும் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த சடலத்தை பார்வையிட்ட திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமை நேர பொறுப்பதிகாரி சடலத்தை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் பிரேத பரிசோதனைக்கும் உட்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மேலும் உயிரிழந்த நபர் யார் என்பது பற்றிய தகவல் தெரியவில்லையெனவும், நீல நிற சாரம் மற்றும் வெள்ளை கோடு சேட் என்பன அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment