ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகிய இரு பிரபல நடுவர்கள் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகிய இரு பிரபல நடுவர்கள்

ஐ.பி.எல். போட்டியிலிருந்து பிரதான நடுவர்கள் இருவர் விலகியுள்ளார்கள்.

அவுஸ்திரேலியாவை சோ்ந்த ஆன்ட்ரூ டை, கேன் ரிச்சா்ட்சன், ஆடம் ஸாம்பா போன்ற வீரா்கள் ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

கொரோனாவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் தனது குடும்பத்தினருக்கு உரிய ஆதரவு அளிக்க எண்ணுவதாக கூறி முக்கிய வீரர்கள் விலகிச் சென்றிந்த நிலையில், இப்பட்டியலில் தற்போது இரு நடுவர்கள் இணைந்துள்ளார்கள். 

பிரபல நடுவர்களான இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன், அவுஸ்திரேலியாவை சேர்ந்த பால் ரைஃபில் ஆகிய இரு நடுவர்களும் சொந்த காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகியுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிதின் மேனனின் மனைவியும் தாயும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமையினாலேயே அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஐ.பி.எல். போட்டிகள் தொடா்ந்து நடைபெறும் என ஐ.பி.எல். அணிகளிடம் (பிசிசிஐ) BCCI தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad