(செ.தேன்மொழி)
நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிளிடம் கடுந்தொனியில் பேசியமை தொடர்பில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளை கடுந்தொனியில் தூற்றியமை தொடர்பில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி விவகாரம் தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றம் சந்தேகநபருக்கு எதிராக திறந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், கொம்பனித் தெரு பொலிஸார் சந்தேகநபரை இன்று செவ்வாய்கிழமை கைது செய்திருந்தனர்.
இதேவேளை, சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment