தடுப்பூசி ஒரு டோஸ் போட்டாலே கொரோனா பரவல் பாதியளவு குறைகிறது - இங்கிலாந்து ஆய்வில் தகவல் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

தடுப்பூசி ஒரு டோஸ் போட்டாலே கொரோனா பரவல் பாதியளவு குறைகிறது - இங்கிலாந்து ஆய்வில் தகவல்

கொரோனா தடுப்பூசி போடுவதற்கும், இத்தொற்று பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்த புதிய பொது சுகாதார ஆய்வு இங்கிலாந்தில் நடத்தப்பட்டது

நேற்று வெளியிடப்பட்ட அந்த ஆய்வு முடிவுகளின்படி, தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி போட்டவர்களின் மூலம் கொரோனா பரவல் அபாயம் 38 முதல் 49 சதவீதம் குறைகிறது.

ஆக்ஸ்போர்ட் - ஆஸ்ட்ராஜெனகா, பைசர் - பயோன்டெக் ஆகிய எந்த தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ போட்டவர்களுக்கும் இது பொருந்தும்.

அதேபோல, தடுப்பூசி போட்ட 14 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கிறது, அதில் வயது வித்தியாசமில்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கின்றன.

தடுப்பூசி ஒரு டோஸ் போட்டாலே வீடுகளில் 50 சதவீதம் தொற்று பரவல் குறைவது உறுதியாகி இருக்கிறது. தடுப்பூசிதான் நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் காக்கிறது என்பதற்கு இது சான்றாகிறது. 

எனவே, தேசிய சுகாதார சேவையால் தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைப்பு விடுக்கப்படும்போது மக்கள் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்தார்.

தற்போதைய கண்டுபிடிப்பு, ஊக்கமளிப்பதாக இருந்தாலும், தொற்றைத் தவிர்க்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளான கை சுகாதாரத்தைப் பேணுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad