உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் தீபமேற்றி அஞ்சலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் தீபமேற்றி அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) முற்பகல் அலரி மாளிகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதுடன், தீபமேற்றி அவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்தார்.

பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவரையும் நினைவு கூர்ந்து முற்பகல் 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பிரதமர், அதனை தொடர்ந்து தீபமேற்றி அவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்தார். 

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமருடன் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷTம் கலந்து கொண்டார்.

இத்தால் ஈராண்டுகளுக்கு முன்னர் இன்று போன்றதொரு தினத்தில் தீவிரவாத குழுவொன்றினால் நிகழ்த்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் 270 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான நிமல் லன்சா, இந்திக அனுருத்த மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment