கிளிநொச்சியில் மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன் - நிர்கதிக்குள்ளாகியுள்ள மூன்று பிள்ளைகள் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

கிளிநொச்சியில் மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன் - நிர்கதிக்குள்ளாகியுள்ள மூன்று பிள்ளைகள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் இன்று (01) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். குடும்ப தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என தெரியவருகிறது. அத்தோடு மனைவியின் சேலையில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார் எனவும் அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இச்சம்பவத்தில் 38 வயதுடைய வேலாயுதம் சிவஞானம் என்பவரும் அவரது மனைவியான 36 வயதுடைய சிவஞானம் குகனேஸ்வரி என்வரும் இறந்துள்ளனர்.

இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 மற்றும் 06 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனனர். இவர்களின் இந்த நிலையில் மூன்று பிள்ளைகளும் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். பொலீஸ் மேதிலக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad