விவசாய காணிகளில் விளம்பர பலகைகளை அகற்றுமாறு போராட்டம் - கிழக்கு மாகாண ஆளுநர் தீர்வை பெற்றுத் தருவதாக உறுதி - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

விவசாய காணிகளில் விளம்பர பலகைகளை அகற்றுமாறு போராட்டம் - கிழக்கு மாகாண ஆளுநர் தீர்வை பெற்றுத் தருவதாக உறுதி

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தொடுவாய் பகுயில் விவசாய காணிக்குள் நடப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றக் கோரி மக்கள் நேற்றுமுன்தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, களத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர் சென்றிருந்தார்.

இதன்போது ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், எதிர்ப்புக்கள் இருந்த போதிலும், விவசாயம் என்ற போர்வையில் அரச காணிகளில் நடைபெற்று வரும் காடழிப்பைத் தடுக்க தேவையான முடிவுகள் எடுக்கப்படும்.

இருப்பினும், சட்டப்பூர்வமாக்கல் உறுதி செய்யப்பட்டவுடன் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நிலங்கள் விரைவில் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

இதன்போது வன பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் ஏன் விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டதாகவும், நீண்ட காலமாக பயிரிட்ட நிலங்கள் அப்பகுதியில் இருந்ததால் விளம்பர பலகைகளை அமைத்த பின்னர் நுழைய முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர். 

அதுமட்டுமின்றி சிலர் நீண்ட காலமாக அந்த நிலங்களுக்கு உரித்துப்படிவம் உள்ளதாகவும் சிலர் கூறினர்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் விளம்பர பலகைகளுக்கு பின்னால் உள்ள வயல் நிலங்களை பார்வையிட்ட ஆளுநர், அதன் சட்டபூர்வமான தன்மையை சரிபார்த்த பின்னரே விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்றும், விவசாயம் என்ற போர்வையில் காடழிப்புக்கு எந்தவிதமான காரணமும் இருக்காது என்றும் கூறினார்.

வனத் திணைக்களத் துறையினருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக ஆளுநர் முடிவு செய்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment