2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ. எல் பீரிஸ் அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் நடத்தவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment