கொரோனா புதிய கொத்தணி உருவாகக்கூடும்? சுகாதார அமைச்சு எச்சரிக்கை - மக்களை விழிப்பாக இருக்குமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

கொரோனா புதிய கொத்தணி உருவாகக்கூடும்? சுகாதார அமைச்சு எச்சரிக்கை - மக்களை விழிப்பாக இருக்குமாறு வேண்டுகோள்

நாளாந்தம் 100 ற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்படுவதால் நாட்டில் கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர, மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் இன்னும் ஆபத்தில் உள்ளதாக கூறினார்.

ஆகவே முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை அவசரகால பயன்பாட்டுக்காக சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அங்கீகரிக்க கணிசமான தரவுகளைப் பெற்றுள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.

இருப்பினும் நிபுணர் குழு ஒப்புதல் வழங்க இன்னும் தரவுகள் அவசியமென சுட்டிக்காட்டிய அவர், விரைவில் இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment