பலாங்கொடை நகர சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

பலாங்கொடை நகர சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம்

பலாங்கொடை நகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினராக கடமையாற்றி வந்த அகில சாலிய எல்லாவள பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவானதையடுத்து பலாங்கொடை நகர சபையின் உறுப்பினர் பதவி நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்தது.

அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் பலாங்கொடை நகர சபையின் புதிய உறுப்பினராக மங்கலிகா இலங்ககோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான அமைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அகில சாலிய எல்லாவள முன்னிலையில் புதிய நகர சபை உறுப்பினர் மங்கலிகா இலங்ககோன் சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.

நிகழ்வில் பலாங்கொடை நகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி சுழற்சி, பலாங்கொடை நிருபர்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad