சுமந்திரன் தலைமையிலான குழுவினர் கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு விஜயம் - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

சுமந்திரன் தலைமையிலான குழுவினர் கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு விஜயம்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் செயற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் அதனைச் செயலுருவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள களவிஜயமொன்றினை இன்று (30) மேற்கொண்டிருந்தனர்.

கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான கூட்டமானது, எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னோடியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்புப்பேரவை தலைவர் செ.கணேஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் ஆகியோர் தற்போதைய பிரதேச செயலாளராகச் செயற்படும் ரி.அதிசயராஜைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பு கல்முனை உப பிரதேச செயலகத்திற்குள் நடைபெற்றதுடன், பிரதேச செயலகம் தரமுயர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad