தனியுரிமை சிக்கல்களால் முன்னணி கோல்ப் நட்சத்திரமான டைகர் வூட்ஸின் விபத்துக்கான விசாரணை அறிக்கையை வெளியிடுவதில் சிக்கல் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

தனியுரிமை சிக்கல்களால் முன்னணி கோல்ப் நட்சத்திரமான டைகர் வூட்ஸின் விபத்துக்கான விசாரணை அறிக்கையை வெளியிடுவதில் சிக்கல்

முன்னணி கோல்ப் நட்சத்திரமான டைகர் வூட்ஸின் கார் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு, விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

எனினும் வூட்ஸ் அனுமதி வழங்கினால் மாத்திரம் அது பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"கருப்பு பெட்டியின் உள்ளடக்கங்கள் எங்களிடம் உள்ளன, அனைத்தும் விசாரணைகளும் பூர்த்தி செய்யப்பட்டு, கையொப்பத்துடன் சீல் செய்யப்பட்டுள்ளன."

"ஆனால் மோதலில் ஈடுபட்டவர்களின் அனுமதியின்றி அதை வெளியிட முடியாது." என்று லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலெக்ஸ் வில்லானுவேவா தெரிவித்துள்ளார்.

தனியுரிமை சிக்கல்கள் காரணமாக சம்பந்தப்பட்ட சில தரப்பினருக்கு மட்டுமே முழு விபத்து அறிக்கைகளுக்கான அணுகலை கலிபோர்னியா சட்டத்தினால் காட்சிப்படுத்த முடியும்.

45 வயதான வூட்ஸ், கடந்த பெப்ரவரி 23 அன்று ஏற்பட்ட விபத்தினால் கால் முறிந்து, கணுக்கால் சிதைந்த நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

அதன் பின்னர் அவர் மார்ச் 16 அன்று மாத தொடக்கத்தில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி புளோரிடாவில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

விபத்து நடந்த நேரத்தில் முதுகு அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த அமெரிக்க முன்னாள் உலக நம்பர் ஒன், மயக்க நிலையில் காணப்பட்டார் மற்றும் சம்பவ இடத்தில் அவரது முகம் மற்றும் கன்னம் இரத்தத்தில் மூழ்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment