தற்போதைய கொரோனா நிலைமையினை அனுசரித்து தேசிய வெசாக் நிகழ்வினை நடத்த தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

தற்போதைய கொரோனா நிலைமையினை அனுசரித்து தேசிய வெசாக் நிகழ்வினை நடத்த தீர்மானம்

தற்போதைய கொரோனா நிலைமையினை அனுசரித்து தேசிய வெசாக் நிகழ்வினை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் இடம்பெற உள்ள நிலையில், இன்றையதினம் தேசிய வெசாக் உற்சவ முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில், புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தனவின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

குறித்த முன்னேற்பாட்டு கூட்டத்தில் தேசிய வெசாக் நிகழ்விற்கென தற்போது வரை முன்னெடுக்கப்படும் முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு, தற்போதுள்ள கொரோனா நிலைமைக்கு ஏற்றவாறு அனுசரித்து அதற்கு ஏற்றவாறு தேசிய வெசாக் நிகழ்வினை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நிகழ்வில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதோடு, தற்போதைய இடர் நிலைமை இடம்பெறுவதன் காரணமாக சுகாதார நடைமுறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் இன்றையதினம் ஆராயப்பட்டது.

எனினும் தற்போது அதிகரித்து வரும் தொற்று நிலைமையினை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மிக அமைதியான முறையில் தேசிய வெசாக் நிகழ்வினை கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த முன்னேற்பாட்டு கூட்டத்தில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, முப்படைகளின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேச செயலாளர், மற்றும் மதகுருக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad