தேயிலை செய்கையை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் மானியத் தொகையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

தேயிலை செய்கையை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் மானியத் தொகையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

(எம்.மனோசித்ரா)

தேயிலை உற்பத்தியை உயர்மட்டத்தில் பேணுவதற்காக சிறு தேயிலை தோட்டக் காணிகளில் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. எனவே தேயிலை செய்கையை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் மானியத் தொகையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் மொத்த தேயிலை உற்பத்தி 300 மில்லியன் கிலோவாகக் காணப்பட்டது. அவற்றில் 75 வீதமான 225 மில்லியன் கிலோ சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டவையாகும்.

தேயிலை உற்பத்தியை உயர்மட்டத்தில் பேணுவதற்காக சிறு தேயிலை தோட்டக் காணிகளில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

தேயிலையை மீள் பயிரிடல் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக 04 வருடங்கள் எடுப்பதாலும், அதற்கான செலவு அதிகமானதாலும் மீள் பயிரிடல் மற்றும் புதிய பயிரிடல் போன்றவற்றுக்கு போதுமானளவு ஆர்வம் காட்டாமையால் 2025 ஆம் ஆண்டளவில் 360 மில்லியன் கிலோ உற்பத்தி இலக்கை அடைவதற்காக போதுமானளவு ஊக்குவிப்புக்கள் வழங்க வேண்டியுள்ளது.

அதற்கமைய தேயிலை மீள் பயிரிடல் மானியத் தொகையை ஹெக்டயர் ஒன்றுக்கு 400,000 ரூபாய்களில் இருந்து 500,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad