நைஜீரிய சிறைச்சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் -1800 கைதிகள் தப்பி ஓட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 6, 2021

நைஜீரிய சிறைச்சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் -1800 கைதிகள் தப்பி ஓட்டம்

நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகங்களை அடுத்து 1,800 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நிர்வாகத் தொகுதியை வெடிக்க வைக்க வெடி பொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவர்கள் தென்கிழக்கு நகரமான ஓவெர்ரியில் உள்ள சிறை முற்றத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு கைதிகள் திரும்பி வந்துள்ளதாகவும், 35 பேர் தப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிரிவினைவாத குழுவான பியாப்ராவின் பழங்குடி மக்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் குற்றம் சாட்டினர். ஆனால் அதனை அவர்கள் மறுத்துள்ளனர்.

1,844 கைதிகள் இமோ மாநில சிறையில் இருந்து தப்பித்ததை நைஜீரியா உறுதிப்படுத்தியுள்ளது.

லொறிகள் மற்றும் பேருந்துகளில் வந்த ஆயுதம் ஏந்தியவர்கள் திங்கட்கிழமை அதிகாலையில் ஓவர்ரி நகரத்திலுள்ள சிறைச்சாலையை தாக்கினர்.

இது குறித்து நைஜீரிய சிறைச்சாலையின் செய்தித் தொடர்பாளர் பிரான்சிஸ் ஏனோபர் கூறியதாவது தாக்குதல் நடத்தியவர்கள் கனகர ஆயுதங்களுடன் வந்தனர். எந்திர துப்பாக்கி முதல் ரொக்கெட் செலுத்தும் கையெறி குண்டுகள் வரை அனைத்தையும் வைத்திருந்தனர்.

அவர்கள் பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள ஆயுத கிடங்கை அடைந்து ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக தாக்குதல் நடத்தி உள்ளனர். ஆனால் அது முறியடிக்கப்பட்டது.

சிறையில் இருந்து தப்பிய கைதிகளை மீண்டும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி இந்த தாக்குதலை, அராஜகவாதிகள் மேற்கொண்ட பயங்கரவாத செயல் என கூறியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்களையும் தப்பித்த கைதிகளையும் பிடிக்க பாதுகாப்புப் படையினரை அவர் அழைத்துள்ளார்.

இவ்வாண்டில் ஜனவரி மாதம் முதல் தென்கிழக்கு நைஜீரியா முழுவதும் பல பொலிஸ் நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு ஏராளமான வெடிமருந்துகள் திருடப்பட்டுள்ளன. தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

No comments:

Post a Comment