போட்டியாளர் சட்டப்படி திருமணமானால் ஏற்றுக் கொள்ளப்படுவார் - திருமதி இலங்கை அழகியை தெரிவு செய்யும் அமைப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

போட்டியாளர் சட்டப்படி திருமணமானால் ஏற்றுக் கொள்ளப்படுவார் - திருமதி இலங்கை அழகியை தெரிவு செய்யும் அமைப்பு

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்றுமுன்தினம் (04.04.2021) 2021 ஆம் ஆண்டின் திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சம்பவத்திற்காக திருமதி இலங்கை அழகியை தெரிவு செய்யும் அமைப்பு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் திருமதி உலக அழகி மற்றும் திருமதி இலங்கை அழகி பட்டத்தை வென்ற கரொலின் ஜூரியின் செயலை கண்டு நாங்கள் மனம் வருந்துகிறோம்.

அவரின் செயல் திருமதி இலங்கை அழகியை தெரிவு செய்யும் அமைப்பின் நடத்தை விதிமுறை மற்றும் முன்னர் தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிராகவுள்ளது.

மேற்கூறிய சம்பவத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், நாங்கள் அதற்கு நடவடிக்கை எடுப்போம். எங்கள் மதிப்பீட்டின் வெளிப்பாட்டின் அடிப்படையில் நாங்கள் செய்தது சரியானதாகக் கருதப்படுகிறது.

திருமதி இலங்கை மற்றும் திருமதி உலக அழகிகளை தேர்வு செய்யும் அமைப்பின் இயக்குனர் சந்திமல் ஜெயசிங்க கரோலின் ஜூரியை அவரது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கையொன்றை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் திருமதி உலக அழகி தெரிவு செய்யப்படுவது இல்லை. சர்வதேச போட்டியில் பங்கேற்க திருமதி இலங்கை அழகி மற்றும் திருமதி உலக அழகி போட்டியாளர் சட்டப்படி திருமணமானால் அவர் ஏற்றுக் கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad