அட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளபோதும் அது குறித்து சபைத் தலைவர் அறியாதுள்ளதாகவும் இது ஏனைய உறுப்பினர்கள் மீதும் நகர மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கு வழிவகுக்கும் என நகர சபையின் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டனர்.
நகர சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நகர சபை தவிசாளர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் கூடியது.
அப்போது ஓழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பிய சபை உறுப்பினர் டாக்டர் அ.நந்தகுமார், இன்றைய அமர்விற்கு செயலாளர் வருகை தரவில்லை.
செயலாளர் இல்லாது எவ்வாறு சபையை முன்னெடுப்பது ? தவிசாளர் அவருக்கு விடுமுறை கொடுத்து வீட்டில் நிறுத்தி வைத்து விட்டாரா அல்லது அவர் விடுமுறை கோரியுள்ளாரா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு தவிசாளர் பதிலளிக்கையில், செயலாளர் தனக்கு இன்று வர முடியாது என எனக்கு தந்தியின் மூலம் அறிவித்துள்ளார். அது தொடர்பில் நான் உள்ளூராட்சி மன்ற துணை ஆணையாளரிடம் ஆலோசனை பெற்றேன். ஆகவே செயலாளர் இல்லாது சபையை நடத்தும் அதிகாரத்தை நான் கொண்டிருப்பதால் அதில் பிரச்சினைகள் இல்லை என்றார்.
அதையடுத்து தொடர்ந்து உரையாற்றிய உறுப்பினர் அ.நந்தகுகுமார், ‘பல சந்தர்ப்பங்களில் நான் சபை செயலாளரின் ஊழல்கள் குறித்து இங்கு கூறியிருக்கின்றேன், ஆனால் எவரும் அது குறித்து கவனத்தில் கொள்ளவில்லை.
தற்போது அவர் செய்த ஒரு ஊழல் செயற்பாடு காரணமாக அட்டன் மாவட்ட நீதிமன்றம் நகர சபை பெயர் குறிப்பிட்டு வழக்கொன்றுக்கு அழைப்பானை அனுப்பியுள்ளது.
இரண்டாவது பிரதிவாதியாக செயலாளர் பெயரிடப்பட்டுள்ளார். இது பாரதூரமான விடயம். தனது தனிப்பட்ட வர்த்தக செயற்பாட்டுக்கு அவர் நகர சபை கடித தலைப்பை பயன்படுத்தி ஒரு தனியார் நிறுவனத்திடம் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஆறு தடவை இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட பொருட்களின் பெறுமதி 11 இலட்சத்து 76 ஆயிரத்து 586 ரூபாய் சதம் 37. இது தொடர்பில் கொடுப்பனவுகள் செலுத்தப்படாததால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கு எண் எம்./2667/21 ஆகும். நகர சபை பெயரில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதை தவிசாளர் எவ்வாறு அறியாது இருக்க முடியும்? செயலாளரை பாதுகாக்கும் செயற்பாடா இது என்று கேட்கிறேன்.
நகர சபை என்றால் தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என்பதே அர்த்தமாகும்.
அப்படியானால் இந்த வழக்குக்கு உறுப்பினர்களாகிய நாமும் சம்பந்தப்பட்டுள்ளோமா ? இந்த ஊழல் பற்றி தவிசாளர் அறிந்திருந்தால் அவர் ஏன் இதுவரை பொலிஸ் நிலையத்தில் செயலாளருக்கு எதிராக முறைப்பாடொன்றை செய்யவில்லை? இனியும் செய்யாவிடின் அதை நான் சபை உறுப்பினர் என்ற வகையில் நாளை செய்யப்போகிறேன் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
எனக்கு நகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி எழுந்துள்ளது. இன்று அட்டன் நகர வாழ் மக்கள் எம்மீது வசை பாடுகின்றனர். அவர்களுக்கு முகங்கொடுக்க முடியாதிருக்கின்றேன். சில முடிவுகளை அறிவிக்கவே இன்று சபைக்கு வந்தேன். எனினும் இறுதி நேரத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் கூறிய வார்த்தைக்காக எனது முடிவை மாற்றிக் கொண்டேன். செயலாளர் மீது கடந்த காலங்களிலும் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தன.
இப்போது வழக்கு வரை சென்றுள்ளது. சபையின் தலைவர் இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது சபையின் ஆயுட்காலம் இன்னும் ஒரு வருடத்துக்கே குறைவாக உள்ளது. அதற்கு முன்னர் இந்த கறையை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விடயத்தை அம்பலப்படுத்திய உறுப்பினர் டாக்டர் நந்தகுமாருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
இந்த சம்பவம் மற்றும் வழக்கு தொடரப்பட்டமை தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லையென்ற தவிசாளரின் பதிலை நாம் நம்புகிறோம். எனினும் இங்கு சில உறுப்பினர்கள் கைகளில் வைத்திருக்கும் ஆவணங்கள் எம்மிடம் இல்லை. சபைத் தலைவருக்கு அபகீர்த்தி நேரும் என்ற அக்கறை இருந்திருந்தால் அதை ஏன் இந்த உறுப்பினர்கள் அவருக்கு வழங்கியிருக்க முடியாது? இப்போது அனைவருக்கும் இது தெரிந்த விடயமாகி விட்டது. எனவே அது தொடர்பில் சபைத் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இங்கு அனைத்து உறுப்பினர்களினதும் கோபம் எனக்கு விளங்குகின்றது. ஏற்கனவே செயலாளரின் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தன. ஆனால் அது குறித்த முழுமையான தகவல்களை நான் சேகரித்து கொண்டிருக்கின்றேன். சபைத் தலைவர் என்ற வகையில் எனக்கு சில பொறுப்புகள் உள்ளன.
முக்கியமாக உண்மையான தகவல்களைப் பெற்று அதை சபைக்கு பாரப்படுத்த வேண்டும். நீங்கள் கூறும் வழக்கு தொடர்பான அழைப்பாணை ஆவணம் எனக்கு கிடைக்கவில்லை. அது தொடர்பில் எனக்குத் தெரியாது. நான் இப்போதிலிருந்தே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்கிறேன்.
செயலாளரிடம் விளக்கம் கோரப்படும். மட்டுமன்றி சட்ட நடவடிக்கை குறித்து உள்ளூராட்சி துணை ஆணையாளரிடம் பேச்சு நடத்துகின்றேன். நான் யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் கிடையாது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செயலாளரை வைத்து இனி இங்கு பணியாற்ற முடியாது என்பதை அறியத்தருகின்றேன். அதற்குப்பதிலாக புதிய செயலாளர் ஒருவரை நான் கோரியுள்ளேன்.
சேகரி
No comments:
Post a Comment