2020 இல் உலகில் மரண தண்டனையை செயற்படுத்தியதில் முதல் ஐந்தில் நான்கு மத்திய கிழக்கு நாடுகள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
உலகெங்கும் கடந்த ஆண்டு பதிவான 483 மரண தண்டனைகளில் 88 வீதமானது ஈரான், எகிப்து, ஈராக் மற்றும் சவூதி அரேபியா நாடுகளில் இடம்பெற்றிருப்பதாக அந்த உரிமைக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து உலகமே உயிர்களை காப்பதில் அவதானம் செலுத்தியபோது இந்த நாடுகள், இறக்கமற்ற மற்றும் பயங்கரத்தில் உறுதியாக இருந்துள்ளது என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியது.
உலகெங்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட எண்ணிக்கை கடந்த ஆண்டு பல தசாப்தங்களில் மிகக் குறைவானதாக உள்ளது. எனினும் இந்தப் பட்டியலில் சீனா சேர்க்கப்படவில்லை.
சீனா ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதாக நம்பப்பட்டபோதும் அது பற்றிய புள்ளிவிபரங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி கடந்த ஆண்டில் 18 நாடுகளில் 483 பேர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதோடு அது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26 வீத வீழ்ச்சியை காட்டுகிறது.
No comments:
Post a Comment