கட்சிகளுக்குள் காணப்படும் கொள்கை முரண்பாடு காரணமாக நீதிமன்றத்தை நாடியுள்ள கட்சிகளின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் நீதிமன்றங்களை நாடியுள்ள 6 கட்சிகள் இனம்காணப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்குள் இருந்து வரும் கொள்கை முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ள நீதிமன்றம் சென்றுள்ள கட்சிகளின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருக்கின்றது. இவ்வாறு 6 கட்சிகள் நீதிமன்றம் சென்றிருப்பதை அறிந்திருக்கின்றோம்.
குறித்த கட்சிகளின் செயலாளர், தலைவர் பதவி உட்பட பல பதவிகளுக்கு பல நபர்கள் முன்வருவதால் சட்டப் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அந்த கட்சிகளின் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நீதிமன்ற நடவடிக்கைக்கு சென்றிருக்கின்றன. அதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அந்த கட்சிகளின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானித்திருக்கின்றோம்.
மேலும் குறித்த கட்சிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அந்த கட்சிகளுக்கு எதிர்வரும் தேர்தல்களில் பங்கேட்கும் சந்தர்ப்பம் இல்லாமல்போகும். குறித்த கட்சிகளின் நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் அவற்றின் பெயர்களை வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment