கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து வந்து வாக்கை செலுத்தினார் கனிமொழி - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து வந்து வாக்கை செலுத்தினார் கனிமொழி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கனிமொழி கொரோனா கவசத்துடன் சென்று வாக்கை செலுத்தியுள்ளார்.

தமிழ் நாட்டில் சமீபகாலமாக கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் நேற்று நடைபெற்ற வாக்குப் பதிவின் போது மாலை 06.00 மணியிலிருந்து 07.00 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து வாக்கு செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழிக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சென்னையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இதனால் வாக்களிக்க வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணிக்கு பின்பு முறையான பாதுகாப்பு கவச உடையை அணிந்து வந்து கனிமொழி வாக்கு செலுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad