கொலை, கொள்ளைகளில் தொடர்ந்து ஈடுபடும் ரவுடி கும்பல்களுக்கு இனி பிணை வழங்கக்கூடாது : இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

கொலை, கொள்ளைகளில் தொடர்ந்து ஈடுபடும் ரவுடி கும்பல்களுக்கு இனி பிணை வழங்கக்கூடாது : இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

ஜெயிலுக்கு பதில் பிணை என்ற கொள்கைகளை இதில் பயன்படுத்தக் கூடாது. இத்தகைய குற்றவாளிகளை பிணையில் விட்டால் அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை மிரட்டுவதுடன் சாட்சியத்தையும் கலைப்பார்கள்.

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே நேற்று ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் நேரத்தில் அவரது தலைமையிலான பெஞ்ச் ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தாதா அருண்யாதவுக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவர்கள் விசாரித்தனர். அவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அப்போது தலைமை நீதிபதி பாப்டே கூறியதாவது பிரபலமாக திகழும் ரவுடி கும்பங்கள், கூலிப்படையினர், கொடூர குற்றவாளிகள், தொடர்ந்து கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது.

சிறைச்சாலைக்கு பதில் பிணை என்ற கொள்கைகளை இதில் பயன்படுத்தக்கூடாது. இத்தகைய குற்றவாளிகளை பிணையில் விட்டால் அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை மிரட்டுவதுடன் சாட்சியத்தையும் கலைப்பார்கள்.

இந்த குற்றவாளி மீது 15 கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவரை எப்படி பிணையில் வெளியே விட முடியும். உத்தரப் பிரதேச பிரபல ரவுடி ஒருவர் மீது 64 கிரிமினல் வழக்குகள் இருந்த நிலையில் அவன் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தான்.

கடைசியாக 8 பொலிஸ்காரர்களை கொலை செய்தான். அவனுக்கு எப்படி பிணை வழங்கப்பட்டது. இதுபோன்ற அச்சுறுத்தல் தருபவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என்பதை அனைத்து உயர் நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment