நாவலப்பிட்டி ஸ்ரீபாத (மூலிக பிரிவென) ஆரம்ப கல்விக் கூடத்தில் உண்டியல் பணத்தை களவாட முயன்ற இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டிய ஸ்ரீபாத விகாரையின் விகாரதிபதியினால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சி.சி.ரீ.வி காணொளியின் உதவியுடன் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர், அதற்கமைய நாவலப்பிட்டி மெதகாபிட்டிய பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
விகாரையிலுள்ள தேரர்களுக்கான ஆரம்ப கல்விக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் உள்ள பணத்தை களவாட கடந்த காலத்தில் திருடர்களினால் முயற்சிகள் மேற்கொண்டதையடுத்து அப்பகுதியில் சி.சி ரீ.வி கமரா பெருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி இரவு இனம் தெரியாத நபர் ஒருவர் உள்நுழைவதை கமராவினூடாக அவதானித்த விகாராதிபதி அவரை பிடிக்க முயற்சித்த போதும் அவர் தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் சி.சி.ரீ.வி கமராவின் காணொளி உதவியுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞனை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
No comments:
Post a Comment