முல்லைத்தீவில் மூன்று கடைகள் எரிந்து நாசம் ! உரிமையாளர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

முல்லைத்தீவில் மூன்று கடைகள் எரிந்து நாசம் ! உரிமையாளர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் இன்று (29) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளதோடு மேலும் ஒரு கடை பகுதியளவில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் கடையின் உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினை தொடர்ந்து தீ பரவி இரண்டு கடைகள் முற்றாக எரிந்துள்ளதுடன் மற்றும் ஒரு கடை பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்த தீ விபத்தின் போது முத்தையன் கட்டினனை சேர்ந்த 72 அகவையுடைய செல்லப்பா அரிராசசிங்கம் என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒட்டுசுடுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

தீ விபத்தினை கட்டுப்படுத்த படையினர், பிரதேச இளைஞர்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டு தண்ணீர் பாச்சியுள்ளதுடன் படையினர் தண்ணீர் பவுசர்கள் கொண்டு தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்கள்.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு ஒன்று இதுவரை இல்லை எனவும் மிக விரைவில் மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு ஒன்றை அமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment