கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்ட மூலம் ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் - ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் - News View

About Us

About Us

Breaking

Friday, April 16, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்ட மூலம் ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் - ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல்

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்ட மூலத்தின் விளைவாக ஊழல் மோசடிகள் இடம்பெறக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டு, அதற்கு எதிராக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

மேற்படி சட்ட மூலத்தின் கூறுகள், அரசியலமைப்பின் முக்கிய சரத்துக்களை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவை நிதிப்பாய்ச்சல்களை இலகுவாக்குவதன் விளைவாக நிதி மோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை துறைமுக நகரத்தில் அமைக்கப்படவுள்ள வணிக, வர்த்தகக் கட்டமைப்புக்களின் உரிமையாளர்கள் யார் என்பது தொடர்பில் போதிய வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்றும் அத்தகைய தகவல்களைப் பெறக்கூடியதாக இருப்பது ஊழல் மோசடிகள் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமாகும் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள வங்கிகளின் நடவடிக்கைகளில் போதிய வெளிப்படைத்தன்மை பேணப்படாமையானது, நாட்டின் ஏனைய வங்கிகள் மீது பிரயோகிக்கப்படும் சட்டங்களிலிருந்து விலகிச் செயற்படுவதற்கு அவற்றுக்கு இடமளிக்கும் என்றும் அது நாட்டில் இரகசிய அதிகார வரம்பு ஒன்றை உருவாக்கும் என்றும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment