வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றும் வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Saturday, April 3, 2021

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றும் வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்தை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

இந்த வர்த்தமானி இந்த மாதம் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்த அவர், வவுனியா வளாகம் தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக உள்ளதாகத் தெரிவித்தார்.

அதனை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியடுவதற்கான பணிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் கல்வி அமைச்சும் தற்போது இறுதிப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment