பிம்ஸ்டெக் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சாசனத்தை விரைவாக நிறைவு செய்யவும் - அழைப்பு விடுத்தார் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, April 2, 2021

பிம்ஸ்டெக் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சாசனத்தை விரைவாக நிறைவு செய்யவும் - அழைப்பு விடுத்தார் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன

17வது பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பிம்ஸ்டெக் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் சாசனத்தை விரைவாக நிறைவு செய்வதற்கு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் (பிம்ஸ்டெக்) 17வது அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் நிகழ்த்திய தனது வரவேற்புரையில், பிம்ஸ்டெக் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் சாசனத்தை விரைவாக நிறைவு செய்வதற்கு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வு 01 ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது. இந்தத் தளமானது, சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகமான புரிதல், நம்பிக்கை மற்றும் நட்புக்கான இடத்தை வழங்கும் என்றும், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மீதான அர்ப்பணிப்பு பற்றிய கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்ளும் என்றும் வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.

கூட்டத்தின் தலைவராக வெளிநாட்டு அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். 

2021 மார்ச் 31ஆந் திகதி அமைச்சர்கள் மட்டக் கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற விஷேட சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தில் இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தலைமை தாங்கினார்.

மூன்றாம் செயற்குழு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியால் இறுதி செய்யப்பட்ட பிம்ஸ்டெக் போக்குவரத்து இணைப்பு தொடர்பான பாரிய திட்டத்தை விரைவாக ஏற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வெளிநாட்டு அமைச்சர் வலியுறுத்தினார். 

கடலோர கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட போக்குவரத்து இணைப்பு முறைமைகள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டன என்றும், இன்று எதிர்கால இடையூறுகளைத் தாங்கும் திறன் கொண்ட வீதி இணைப்புக்கள் மற்றும் விமானச் சரக்கு ஆகியவை விநியோகச் சங்கிலிகளுக்கும், மக்கள் தொடர்பு மற்றும் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கும் இன்றியமையாதது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பூட்டானில் இருந்து புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளர் திரு. டென்ஸின் லெக்பெல் அவர்களை வரவேற்ற வெளிநாட்டு அமைச்சர், பிம்ஸ்டெக் செயலகத்தை வழிநடாத்துவதில் அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என வாழ்த்தியதுடன், அவரது அனைத்து முயற்சிகளுக்குமான இலங்கையின் ஆதரவை உறுதியளித்தார்.

இலங்கை தலைமை நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2018ஆம் ஆண்டில் காத்மண்டுவில் நடைபெற்ற நான்காவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிலிருந்து ஏற்பட்ட முன்னேற்றத்தை பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மீளாய்வு செய்தனர்.

இலங்கை தனது ஆற்றல்களை முழுமையாக மையப்படுத்தியதாகவும், 1997ஆம் ஆண்டு பேங்கொக் பிரகடனத்தை கட்டியெழுப்பும் பிம்ஸ்டெக் சாசனத்தை இறுதி செய்வதற்காக உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியதாகவும் இராஜாங்க அமைச்சர் பாலசூரிய குறிப்பிட்டார். 

ஒத்துழைப்புக்கான நீண்டகாலப் பார்வை மற்றும் முன்னுரிமைகளை இந்த சாசனம் வரையறுப்பதுடன், நிறுவன அமைப்பு மற்றும் தீர்மானிக்கும் செயன்முறைகளின் வெவ்வேறு அடுக்குகளின் வகிபாகங்கள் மற்றும் பொறுப்புக்களை வரையறுக்கின்றது. 

தொழில்நுட்ப நாடுகள், சுகாதாரம் மற்றும் மனிதவள அபிவிருத்தி ஆகியவற்றுடன் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு தொடர்பான துறைகளை வழிநடாத்துவதற்காக இலங்கை ஒப்புக் கொண்ட அமைப்பின் துறைகள் மற்றும் உப பிரிவுகளுக்கு உறுப்பு நாடுகள் முன்னுரிமை அளித்து, பகுத்தறிவளித்தன என அவர் மேலும் தெரிவித்தார். 

தொற்றுநோயால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வெளிப்படும் இடைவெளிகளை கருத்தில் கொண்டு, துறைக்கான செயற்றிட்டமொன்றை இலங்கையில் சம்பந்தப்பட்ட வரிசை முகவர்கள் உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய தொற்றுநோய் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக, 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் சங்கத்தின் சாசனம் நிறைவு செய்யப்பட்டதும் இலங்கையில் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நடாத்துவதற்கு இலங்கை தயாராகி வருகின்றது.

கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்படும் சவால்களை எதிர்கொள்வதற்காக உறுப்பு நாடுகளுக்கு பதிலளிப்பதிலும் ஆதரவளிப்பதிலும் பிம்ஸ்டெக்கின் உறுப்பு நாடுகள் மேற்கொண்ட விரிவான நடவடிக்கைகளை அமைச்சர்கள் பாராட்டியதுடன், வறுமை, இயற்கைப் பேரழிவுகள், காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள் மற்றும் ஏனைய பொது சுகாதார அவசரநிலைகள், பயங்கரவாதம் மற்றும் நாடுகடந்த குற்றங்கள், உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்த்து கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும், உப துறைகளையும் அணிதிரட்டுமாறு உறுப்பு நாடுகளை வலியுறுத்தினர்.

கோவிட்-19 பல்வேறு நாடுகளில் உறுப்பு நாடுகளின் பொருளாதாரங்களை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதாகவும், பிம்ஸ்டெக் பிராந்தியமானது 3 டிரில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதாரத்தை இழந்துள்ளதுடன், இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமும், உலக வர்த்தகத்தில் 3.7 சதவீதமும் ஆகும் என பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் விரிவான நடவடிக்கைகளை பாராட்டுதலுடன் குறிப்பிடுகையில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

ஆகையால், கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து அனைத்தையும் உள்ளடக்கிய, நெகிழக்கூடிய நிலையான மீட்பு உத்திகள் மற்றும் முதலீடுகள் மூலம் சிறப்பாகக் கட்டியெழுப்புவதில் வெற்றி, சவால்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் உள்ளிட்ட அனுபவங்களை தொடர்ந்தும் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டார்.

5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை நடாத்துவதற்கான திகதி உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசித்ததன் பின்னர் எதிர்வரும் மாதங்களில் பிம்ஸ்டெக் செயலகம் மூலம் அறியத்தரப்படும் என இலங்கைப் பிரதிநிதிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.

இறுதி பிம்ஸ்டெக் ஒப்பந்தங்கள், மாநாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கைச்சாத்திடப்படல் / ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும் என கருதப்பட்ட அமைச்சர்கள் மட்டக் கூட்டு அறிக்கை உள்ளிட்ட ஏனைய ஆவணங்கள் மற்றும் கருவிகளுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்தனர்.

உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்களாதேஷின் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி. ஏ.கே. அப்துல் மொமன், பூட்டானின் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி. டண்டி டோர்ஜி, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர், மியன்மார் சர்வதேச ஒத்துழைப்பு மத்திய அமைச்சர் யு கோ கோ ஹேலிங், நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. பிரதீப் குமார் கியாவலி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் தாய்லாந்து இராச்சியத்தின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான திரு. டொன் பரமுத்வினாய் ஆகியோரினால் தலைமை தாங்கப்பட்டனர்.

இலங்கைத் தூதுக்குழுவில் பொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் பி.எம். அம்சா, பொருளாதார விவகாரங்கள் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் அன்சுல் ஜான், சட்ட விவகாரங்களுக்கான பிரதி அதிகாரி டி.எச்.ஆர். சில்வா மற்றும் வெளிநாட்டு அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் பிரிவின் நிறைவேற்று உதவியாளர் கலனி தர்மசேன ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.

No comments:

Post a Comment