கொரோனா வைரஸின் அதிகரிப்பினையடுத்து பங்களாதேஷ் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலம் நாடு தழுவிய ரீதியில் முடக்கல் நிலைக்கு செல்லவுள்ளது.
எனினும் நாட்டின் நிலைமைகள் காரணமாக இலங்கைக்கான தமது சுற்றுப் பயணத்தை இரத்து செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த இன்னும் தீர்மானிக்கவில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் (BCB)தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பி.சி.பி. தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி, சுற்றுப்பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைமுறையில் உள்ளன, ஆனால் தற்போது நாட்டின் நிலையை அவதானிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
முடக்கல் நிலையை அரசாங்கம் அறிவித்ததைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கான சுற்றுப் பயணமானது சந்தேகத்தில் உள்ளது என்று நான் கூற முடியாது.
ஒரு சில நாட்களின் பின்னர் நிலைமைகளை அவதானித்து, இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, சுற்றுப் பயணம் குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார்.
இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் முதலில் கடந்த ஆண்டு ஒக்டோபர் - நவம்பர் மாதங்களில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 21 ஆம் திகதி கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment