மியன்மாரில் ஜப்பான் செய்தியாளர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

மியன்மாரில் ஜப்பான் செய்தியாளர் கைது

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது செய்தியாளரை விடுவிக்கும்படி ஜப்பான் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜப்பானியச் செய்தியாளர் யூக்கி கிட்டாஸூமி, யங்கூனிலுள்ள அவரது இல்லத்தில் கடந்த ஞாயிறு இரவு மியன்மார் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாக அதை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கைகளைத் தூக்கியபடி காணப்பட்ட கிட்டாஸுமி, காரில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக, பி.பி.சி பர்மிஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அந்தக் கைது நடவடிக்கைக்கு விளக்கம் தருமாறு, மியன்மார் அதிகாரிகளைக் கேட்டிருப்பதாகத் தலைமை பாராளுமன்ற செயலாளர் கட்சுனோபு காடோ கூறினார்.

கிட்டாஸுமி மீது இன்னமும் முறையாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவில்லை.

இரவோடு இரவாக அவர், காவல்துறைக் கண்காணிப்பு நிலையத்திலிருந்து இன்சேனிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறையிலுள்ள அவரைச் சென்று காண இராஜதந்திரிகள் அனுமதி கேட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் ஜப்பானியப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

ஏற்கனவே கிட்டாஸுமி, பெப்ரவரி மாதப் பிற்பகுதியில் குறுகிய காலத்துக்குத் தடுத்து வைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment