தொழினுட்ப சேதன முறையில் நெற் செய்கை உற்பத்தியை அதிகரிக்கும் விழிப்புணர்வு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

தொழினுட்ப சேதன முறையில் நெற் செய்கை உற்பத்தியை அதிகரிக்கும் விழிப்புணர்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தொழினுட்ப சேதன முறையில் நெற் செய்கை உற்பத்தியை அதிகரித்தல் தொடர்பான விழிப்புணர்வு மட்டக்களப்பில் இடம்பெற்று வருவதாக விவசாய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைவாக மட்டக்களப்பு விவசாய விரிவாக்கல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு சமுழங்குடா விவசாயப் பிரதேசத்தில் முஹம்மத் சாலி ஹாஜியாரின் நெல்வயலில் செவ்வாய்க்கிழமை 21.04.2021 இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தொழினுட்ப சேதன முறையில் நெற் செய்கை உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் இடம்பெற்று வரும் பயனளிக்கக் கூடிய நெற் செய்கை முறைமைகள் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நடைமுறையில் தொழினுட்ப சேதன முறையைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட நெல் வயல்கள் பிரதேச விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு விவசாயப் பிரதிப் பணிப்பாளர் வி. பேரின்பராசா மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல் ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் விவசாயப் போதனாசிரியர்கள் விவசாய அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment